தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்துணர்ச்சியூட்டும் அம்சங்களுடன் நடைப்பயிற்சிப் பாதைகள் அறிமுகம்

3 mins read
87567129-987f-4cf2-88cc-38c599bb5523
புத்துணர்ச்சியூட்டும் அம்சங்களுடன் நடைப்பயிற்சி பாதைகள் அறிமுகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடியிருப்பாளர்கள் வெவ்வேறு குடியிருப்புப் பேட்டைகளில் இனிமையான வழிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிட ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 16), கிட்டத்தட்ட 250 பேர் ஒன்றிணைந்து அவர்களின் வாரயிறுதியை ஆரோக்கியமான நடைப்பயிற்சியுடன் தொடங்கினர்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 16), கிட்டத்தட்ட 250 பேர் ஒன்றிணைந்து அவர்களின் வாரயிறுதியை ஆரோக்கியமான நடைப்பயிற்சியுடன் தொடங்கினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘வாக்கிங் டிரெய்ல்ஸ்@சிடிசி’ எனப்படும் இத்திட்டம் நடைப்பயிற்சியையும் தொழில்நுட்ப அம்சங்களையும் இணைத்து மக்களுக்குச் சுவையான அனுபவத்தை வழங்க முற்படும்.

இப்புதிய திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் இருக்கும் பல குறிப்பிடத்தக்க இடங்களைச் சுற்றிப் பார்ப்பதிலிருந்து எஸ்ஜி 60 ஆண்டை முன்னிட்டு நாட்டின் வளம் வாய்ந்த வரலாற்றை அறிந்துகொள்வதுவரை பல்வேறு நடவடிக்கைகளில் குடியிருப்பாளர்கள் ஈடுபடலாம்.

சிங்கப்பூரின் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்புடன் கைகோத்து சமூக மேம்பாட்டுக் கழகத்தின் (CDC) ஐந்து நடைப்பயிற்சிப் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது சலிப்புத் தட்டாமல் இருக்கும் வகையில் பல விளையாட்டு அம்சங்களும், பரிசுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

‘அசம்ப்ஷன் பாத்வே’ பள்ளியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சரும் மக்கள் கழகத் துணைத் தலைவருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடைபாதைகளைத் திறந்துவைத்தார்.

சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சரும் மக்கள் கழகத் துணைத் தலைவருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடைபாதைகளைத் திறந்துவைத்தார். அவருடன் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களின் மேயர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சரும் மக்கள் கழகத் துணைத் தலைவருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடைபாதைகளைத் திறந்துவைத்தார். அவருடன் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களின் மேயர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவருடன் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களின் மேயர்களான லோ யென் லிங், பே யாம் கெங், டெனிஸ் புவா, அலெக்ஸ் யாம், தினேஷ் வாசு தாஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட 250 பேர் ஒன்றிணைந்து தங்கள் வாரயிறுதியை ஆரோக்கியமான நடைப்பயிற்சியுடன் தொடங்கினர்.

“மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம் வலியுறுத்துவதற்கேற்ப இந்த நடைபாதைகள், குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க ஊக்குவிக்கும்,” என்று தமது உரையில் குறிப்பிட்டார் மேயர் அலெக்ஸ் யாம்.

“சிறிய நாடான சிங்கப்பூரில் எழில்மிக்க, மரபு வாய்ந்த இடங்கள் உள்ளன என்பதை இந்த நடைபாதைகள் நிரூபிக்கும். ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க இத்திட்டம் ஊக்குவிக்கிறது. சமூக மேம்பாட்டு மன்றங்கள் மக்களின் நலனைக் காக்க பெரிய பங்காற்றுகின்றன. இந்த எஸ்ஜி 60 ஆண்டில் நம் நாடு இன்னும் செழிக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துச் செயல்படுவதில் நாம் கடப்பாடு கொண்டிருப்போம்,” என்று தெரிவித்தார் அமைச்சர் எட்வின் டோங்.

நடைபாதைகளின் அறிமுகத்தை முன்னிட்டு ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களைச் சேர்ந்த வெவ்வேறு குடியிருப்பாளர்கள் காலை ஏழு மணியளவில் ‘அசம்ப்ஷன் பாத்வே’ பள்ளியில் கூடத் தொடங்கிவிட்டனர்.

திரு எட்வின் டோங் சிறப்புரையாற்றிய பின்னர் அனைவரும் கிட்டத்தட்ட 5.5 கிலோமீட்டருக்கு, வடமேற்கு சமூக மன்ற நடைப்பயிற்சியில் உற்சாகத்துடன் பங்குகொண்டனர்.

‘கேஷ்யூ’ பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகே தொடங்கி முன்னாள் புக்கிட் தீமா ரயில் நிலையத்தில் அந்த நடைப்பயிற்சி நிறைவுபெற்றது.

குடியிருப்பாளர்களுடன் அமைச்சர் எட்வின் டோங்கும் ஐந்து மேயர்களும் சிறிது தொலைவிற்கு நடைப்பயிற்சியில் இணைந்துகொண்டனர்.

அமைச்சர் எட்வின் டோங்கும், ஐந்து மேயர்களும் சிறிது தொலைவிற்கு நடைப்பயிற்சியில் இணைந்துகொண்டனர்.
அமைச்சர் எட்வின் டோங்கும், ஐந்து மேயர்களும் சிறிது தொலைவிற்கு நடைப்பயிற்சியில் இணைந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் அலெக்ஸ் யாம், அடுத்த ஆண்டு இன்னும் கூடுதலான நடைப்பயிற்சிப் பாதைகளை, குறிப்பாக செம்பவாங்கில், அறிமுகப்படுத்தப் பரிசீலித்து வருவதாகச் சொன்னார்.

வழக்கத்துக்கு மாறாக, இந்த நடைப்பயிற்சிப் பாதைகளில் முன்னர் பிரபலமாக வலம்வந்த ‘போக்கிமோன்’ விளையாட்டு போன்ற பல கேளிக்கை அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் ‘ஒலி’ எனப்படும் பொம்மைகளைச் சேகரித்தால் கூடுதலான பரிசுகளை வெல்லலாம். மக்கள் இதில் ஈடுபாட்டுடன் பங்குகொள்ள இத்திட்டம் ஒவ்வொரு நடைப்பயிற்சிப் பாதைக்கும் $10 வரையிலான ‘ரிடீம்எஸ்ஜி’ பற்றுசீட்டுகளை வழங்குகிறது.

மேலும், ஒவ்வொரு நடைப்பயிற்சிப் பாதையிலும், பங்குகொள்ளும் முதல் 5,000 பேர், முழுத் தொலைவிற்கும் நடந்தாலோ அனைத்து ஒலி பொம்மைகளையும் சேகரித்தாலோ அவர்கள் $5 ‘ரிடீம்எஸ்ஜி’ பற்றுசீட்டுகளைப் பெறலாம்.

அந்தப் பற்றுசீட்டுகளைக் குறிப்பிட்ட சில அங்காடிக் கடைகளில் பயன்படுத்தலாம். இது தொடர்பான மேல்விவரங்களை go.gov.sg/walkingtrailscdc இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்