மூலிகை உள்ளிழுப்பான்களால் மூக்கு, தொண்டைக்குப் பாதிப்பு என எச்சரிக்கை

மூலிகை உள்ளிழுப்பான்களால் மூக்கு, தொண்டைக்குப் பாதிப்பு என எச்சரிக்கை

1 mins read
a6026b8c-0b13-4c22-a4c7-1e3999b27f1f
பாதுகாப்பற்ற வகையில் நுண்ணுயிர் மாசுபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்ட மூலிகை மருந்து. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்படும் மூலிகையால் ஆன ஒருவகை உள்ளிழுப்பு (inhaler) மருந்தை உறிஞ்சுவதால் மூக்கிலும் தொண்டையிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய உள்ளிழுப்பான்களைப் பயன்படுத்துவதால் நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

‘ஹோங் தாய் மூலிகை இன்ஹேலர் ஃபார்முலா 2’ (Hong Thai Herbal Inhaler Formula 2) எனப்படும் உள்ளிழுப்பான்களில் பாதுகாப்பற்ற வகையில் நுண்ணுயிர் மாசுபாடு இருப்பதாக தாய்லாந்து உணவு, மருந்து நிர்வாகத் துறை கண்டறிந்த பின்னர் அவற்றின் ஒரு பகுதி கடந்த புதன்கிழமை (அக்டோபர் 29) மீட்டுக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த வகை உள்ளிழுப்பான்கள் குறித்து நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மூத்தோர், குழந்தைகள், நுரையீரல் தொற்றுநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளோர் போன்றோரை இந்த மூலிகை உள்ளிழுப்பான்கள் பாதிக்கக்கூடும் என அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்