வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

2 mins read
b1a6f0aa-636a-4651-96d3-edd7de840611
பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியின் முதல் சில நாள்களில், பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வியாழக்கிழமை (பிப்ரவரி 19) பிற்பகல் பெய்த கனமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு இடங்களையும் புக்கிட் தீமாவில் உள்ள ஒரு சாலையையும் தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூரோங் டவுன் ஹால் சாலை (ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 11 முதல் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 12 வரை), பைனியர் பகுதியில் உள்ள பண்டான் சாலை ஆகிய இடங்களை அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் மாலை 4 மணியளவில் சமூக ஊடகங்களில் பதிவிட்டது.

அதனைத் தொடர்ந்து, மாலை 4.50 மணியளவில் வெளியிடப்பட்ட மற்றோர் எச்சரிக்கையில், டனர்ன் சாலை (யார்வூட் அவென்யூ முதல் பின்ஜாய் பார்க் வரை) பகுதியையும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு கழகம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிட்ட தகவலின்படி, தீவின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் மாலை 4.15 மணிமுதல் 5 மணிவரை கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியின் முதல் சில நாள்களில், பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்துவரும் நாள்களில் வானிலை ஓரளவு வறண்டு காணப்படும் என்றும் இருப்பினும் சில பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்