தோ பாயோவில் நீல நிறமாக மாறிய வடிகால் நீர்

தோ பாயோவில் நீல நிறமாக மாறிய வடிகால் நீர்

1 mins read
815c46ae-4e7d-4931-b454-9bed76755818
நீல நிறத்தில் காணப்படும் வடிகால் நீர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோ பாயோவில் இருக்கும் காலாங் ஆற்றுக்குச் செல்லும் வடிகால் நீரின் நிறம் நீலநிறமாக வியாழக்கிழமை பிற்பகல் மாறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அந்த இடத்திற்குப் பிற்பகல் 1.45 மணிக்கு சென்று பார்த்தனர். அவர்கள் புளோக் 205 தோ பாயோ நார்த் அருகே செல்லும் அந்த வடிகாலில் பல மீன்கள் நீந்திச்செல்வதைக் கண்டனர்.

அந்த வடிகால் நீர் குறைந்தது 45 நிமிடங்களுக்கு நீல நிறத்தில் இருந்தது. மேலும், அங்கிருந்து எந்தவொரு துர்நாற்றமும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

“எங்களுக்கு பிற்பகல் 2.30 மணியளவில் நீல நிறத்தில் வடிகாலில் இருந்து நீர் வெளியேறுகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது,” என தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

“எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்த வடிகாலிலும் நீரின் தரத்திலும் இயல்பிற்கு மாறான நிலை எதுவும் கண்டறியப்படவில்லை,”என அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்