நவம்பர் மாதம் பிற்பகுதி முழுதும் மழை

நவம்பர் மாதம் பிற்பகுதி முழுதும் மழை

1 mins read
e7d0a7e1-a492-4752-9e78-9c7a97ccf5cc
இம்மாதத்தில் ஆக அதிக மழை நவம்பர் 7ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் பதிவானது.  - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இம்மாதம் முதல் பாதியில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. அதேபோன்று, மாத இறுதிவரையிலும் மழையை எதிர்பார்க்கலாம். எனவே, நண்பகல் உணவுக்கு வெளியே சென்றால், கையில் குடையை எடுத்துச்செல்வது நல்லது.

அடுத்த 2 வாரத்துக்கு மதிய நேரங்களில் சிறிது நேரம் தீவு முழுதும் மழை பெய்தாலும், மாலை வரை அது தொடர வாய்ப்புள்ளது. சில நாள்களில் பல இடங்களில் பெரும் மழை பெய்யலாம்.

சிங்கப்பூர் வானிலை ஆய்வகம், இம்மாதத்தின் மொத்த மழை அளவு வழக்கத்துக்கு மேலாக இருக்கும் என்று வியாழக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.

பொதுவாக வெப்பநிலை, மிதமாக 24 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவு இருந்தாலும் சில பகுதிகளில் மதியம் மழை பெய்யலாம்.

ஆய்வகம், இம்மாதத்தில் நவம்பர் 7 அன்று ஆக அதிக மழை உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 69.7மி.மீ. அளவு பதிவானது என்று அறிவித்தது. அன்று தீவின் பல வட்டாரங்களில் மிதமான மழையுடன் பெரும் மழையும் பெய்தது என்று அது கூறியது.

ஆக வெப்பமான நாளாக நவம்பர் 3 அமைந்தது. கடைசியாக, கடந்த 2019 நவம்.19 இருந்ததுபோல் அன்று 35.8 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது. வானிலை நிலவரம் சென்ற நூற்றாண்டு, 1929 முதல் பதிவாகி வருகின்றது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்