எல்டர்‌ஷீல்ட், கேர்‌ஷீல்ட் பற்றி பரவும் வாட்ஸ்அப் செய்தி தவறு: சுகாதார அமைச்சு

எல்டர்‌ஷீல்ட், கேர்‌ஷீல்ட் பற்றி பரவும் வாட்ஸ்அப் செய்தி தவறு: சுகாதார அமைச்சு

1 mins read
e4340464-96c1-43a8-b37b-341f2fac364c
அன்றாடச் செயல்களில் ஆறில் மூன்றைச் செய்ய இயலாதோர் எல்டர்‌ஷீல்ட் வழங்குதொகை மூலம் ஆதரவு பெறுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

சுகாதார அமைச்சு எல்டர்‌ஷீல்ட், கேர்‌ஷீல்ட் குறித்து வாட்ஸ்அப்பில் தவறான செய்தி பரவிவருவதைச் சுட்டி, அறிவுறுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு பரவிய அந்தச் செய்தி மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கடுமையான உடற்குறையுள்ள திரு கே என்பவரின் எல்டர்‌ஷீல்ட் வழங்குதொகை ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்பட்ட செய்தி வாட்ஸ்அப்பில் பரவுகிறது.

அதுபற்றி 2018 ஜூலை மாத நாடாளுமன்றக் கூட்டத்தில் பாட்டாளிக் கட்சி எம்.பி. சில்வியா லிம் கேள்வி எழுப்பினார்.

தற்போது அதே செய்தி மீண்டும் பரவுவதாக வியாழக்கிழமை (மார்ச் 13) ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, அதில் பல தவறான தகவல்கள் இருப்பதைக் குறிப்பிட்டது.

எல்டர்‌ஷீல்ட், கேர்‌ஷீல்ட் ஆகிய நீண்டகால காப்புறுதித் திட்டங்கள் கடுமையான உடற்குறையுள்ளோருக்கானது என்று அமைச்சு சொன்னது.

அத்தகையோருக்கு வழங்குதொகைகள் மூலம் ஆதரவளிக்கப்படுகிறது.

அன்றாட வாழ்க்கையில் ஆறில் மூன்று அடிப்படைச் செயல்களைச் செய்ய முடியாது என்று மதிப்பிடப்பட்டோர் வழங்குதொகைகளைப் பெறுகின்றனர்.

ஆனால், வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி அதற்கு முரணாக உள்ளது.

ஒருவர் முழுமையாகச் செயல்பாடுகளை இழந்திருந்தாலோ மரணத் தறுவாயில் இருந்தாலோதான் எல்டர்‌ஷீல்ட், கேர்‌ஷீல்ட் வழங்குதொகைகளைப் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்