உயர்தர பங்களாவை $100 மில்லியனுக்கு விற்கும் குற்றவாளி நிறுவனரின் மனைவி

1 mins read
f2b57044-4504-47d2-868c-9fdeea047030
லிம்மின் மனைவிக்குச் சொந்தமான குவீன் ஆஸ்டிரிட் பார்க்கில் உள்ள பங்களா வீட்டைக் கட்டி 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு $10 மில்லியன் பெறுமானமுள்ள புதுப்பிப்புப் பணிகள் நடத்தப்பட்டதாகவும் சொத்து முகவர் ஒருவர் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஹின் லியோங் டிரேடிங்கின் நிறுவனர் லிம் ஊன் குவினின் மனைவி அவரது உயர்தர பங்களா வீட்டை $100 மில்லியனுக்கு விற்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

அந்த பங்களா வீடு குவீன் ஆஸ்டிரிட் பார்க்கில் உள்ளது.

எண்ணெய் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹின் லியோங் டிரேடிங் தற்போது செயல்பாட்டில் இல்லை.

ஹின் லியோங் டிரேடிங் நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்று அந்த நிறுவனத்துக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அதைத் திருப்பித் தர அமைப்பு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிடம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுக்க லிம் குடும்பம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 999 ஆண்டு குத்தகைக்காலம் கொண்ட அந்த பங்களா வீட்டை அக்குடும்பம் விற்க இருக்கிறது.

அந்த உயர்தர பங்களா வீட்டின் தனி உரிமையாளராக லிம்மின் மனைவி திருவாட்டி டான் சூக் எங்கின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பங்களா வீட்டை அவர் 2017ஆம் ஆண்டில் $46 மில்லியனுக்கு வாங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து அந்த வீட்டை குறைந்தது இரண்டு சொத்து முகவர்கள் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

அந்தப் பங்களா வீட்டைக் கட்டி 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு $10 மில்லியன் பெறுமானமுள்ள புதுப்பிப்புப் பணிகள் நடத்தப்பட்டதாகவும் சொத்து முகவர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்