கடவாய்ப்பல் அறுவைச் சிகிச்சை: மருத்துவர்களுக்குள் கருத்து வேறுபாடு

கடவாய்ப்பல் அறுவைச் சிகிச்சை: மருத்துவர்களுக்குள் கருத்து வேறுபாடு

2 mins read
2452c981-e188-4c61-9754-fd490ec50d53
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகுதிச் சான்றிதழ் குறித்து பல் மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் பல்மருத்துவ மன்றம் (எஸ்டிசி) ஜூலை மாதம் 29ஆம் தேதி அனைத்து பல் மருத்துவர்களுக்கும் ஒரு வழிகாட்டிச் சுற்றறிக்கையை அனுப்பிவைத்தது.

அதில் உள்ள அம்சங்களில் முக்கியமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகுதிச் சான்றிதழ் குறித்து சிங்கப்பூர் பல் மருத்துவர் சங்கம் (எஸ்டிஏ) அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதன் விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, கடவாய்ப்பல் அறுவைச் சிகிச்சை செய்யும் பொதுப் பல்மருத்துவர்கள் தகுதித் திறன் சான்றிதழ்களைப் (சிஓசி) பெற பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய பயிற்சிகளுக்குச் செல்வது ஒரு பல்மருத்துவரின் தொழில் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் செயற்கையான தடைகளை ஏற்படுத்தலாம் என்று பல் மருத்துவர் சங்கம் கருதுகிறது. அவைபோன்ற பல அறுவைச் சிகிச்சைகளைப் பாதுகாப்பான முறையில் இதுவரை செய்துவந்துள்ள மருத்துவர்களுக்கு புதிய விதிமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சங்கம் தெரிவித்தது.

புதிய விதிமுறையின்படி, இடை நிலையிலான மருத்துவ பிரச்சினைகளைக் கொண்ட அறுவைச் சிகிச்சைகளைப் பயிற்சி வகுப்புகள் உள்ளடக்கி நடத்தப்படுகின்றன. ஆனால் மிகவும் சவாலான வகையில் எலும்புடன் சிக்கியுள்ள கடவாய்ப் பல் சிகிச்சையை வாய், முகத்தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் (ஓஎம்எஸ்) செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

தகுதித் திறன் சான்றிதழைப் பெற பொதுப் பல் மருத்துவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் அந்த நிபுணர்கள் வழிநடத்தும் ஒரு அறுவை சிகிச்சையில் உடன் இருக்கவேண்டும்.

ஐந்து அறுவைச் சிகிச்சைகளைப் பயிற்சியின் அங்கமாக அவர்கள் நேரடியாகச் செய்யவேண்டும். அந்த சிகிச்சை முறைகள் அவர்களது மேலாளர்களால் முன்மொழியப் பட்டிருக்க வேண்டும்.

இந்தப் படிநிலைகள் அனைத்தும் ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் புதிய வழிகாட்டியில் சிங்கப்பூர் பல்மருத்துவ மன்றத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்