தஞ்சோங் பகாரில் உள்ள இன்டர்நேசனல் பிளாசா அருகே நேர்ந்த விபத்தில் 67 வயது பெண் மாண்டார்.
விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) காலை ராபின்சன் ரோடு நோக்கிச் செல்லும் அன்சன் ரோட்டில் நடந்தது.
விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காலை 9:15 மணிவாக்கில் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார் ஒன்று பாதசாரி மீது மோதியது, அதில் காயமடைந்த பெண் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது காயமடைந்த பெண் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அதன்பின்னர் அவர் மாண்டார்.
விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.