தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவம் திருட்டு; வெளிநாட்டவர் கைது

1 mins read
8ef9ac29-facb-4001-ab3c-20f1e5825e04
ஆஸ்திரேலியரான அந்தப் பெண் மார்ச் 31ஆம் தேதி சிங்கப்பூருக்கு மீண்டும் வந்தபோது கைதுசெய்யப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈராண்டுகளுக்குமுன் சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்த ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், வாசனைத் திரவப் போத்தலைத் திருடிய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 35.

சிங்கப்பூர்க் காவல்துறை வியாழக்கிழமை (ஏப்ரல் 3) இத்தகவலை வெளியிட்டது.

சாங்கி விமான நிலையத்தின் 1ஆம் முனையத்தில் பயணிகள் புறப்படும் இடத்துக்கு அருகே உள்ள ‘த ஷில்லா டூட்டி ஃபிரீ பெர்ஃப்பியூம் அண்ட் காஸ்மெட்டிக்ஸ்’ கடையில் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அப்பெண் வாசனைத் திரவப் போத்தலைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

கடையில் பொருள் காணாதது குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. காவல்துறையினர் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டபோது அவர் ஏற்கெனவே விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிவிட்டார் எனத் தெரியவந்தது.

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டார்.

வெள்ளிக்கிழமை அவர்மீது குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்