சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள உணவுக் கடையில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய 37 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் புதன்கிழமை (மார்ச் 19) நிகழ்ந்தது.
இதில் மூவர் காயமடைந்தனர்.
இரவு 8.50 மணி அளவில் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இதையடுத்து, 1 பார்க் சாலையில் உள்ள பிபல்ஸ் பார்க் கம்பிளெக்ஸ் கடைத்தொகுதிக்கு அதிகாரிகள் விரைந்தனர்.
காயம் அடைந்த ஆடவர்கள் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு 41 மற்றும் 30 வயது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
42 வயது ஆடவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
காயம் அடைந்த இருவர் சம்பவம் நிகழ்ந்த உணவுக் கடையில் பணிபுரிபவர்கள் என்று சாவ்பாவ் நாளிதழ் தெரிவித்தது.
அபாயகரமான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்துக்காக அப்பெண் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தைச் சுற்றி தடுப்பு போட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணை தொடர்கிறது.