லக்கி பிளாசாவில் தாக்கப்பட்ட பெண்; காவல்துறை விசாரணை

லக்கி பிளாசாவில் தாக்கப்பட்ட பெண்; காவல்துறை விசாரணை

1 mins read
32a36250-023b-422c-8513-de9f7ae2a30e
பெண் தரையில் கிடந்தபோது அந்த ஆடவர் மீண்டும் அவரை உதைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. - படம்: SYMPATHY8712/REDDIT

லக்கி பிளாசா கடைத்தொகுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

ஆடவர் ஒருவர் அப்பெண்ணை உதைத்துத் தாக்குவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வருகின்றன.

தாக்குதல் சம்பவம் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றதாக நம்பப்படுகிறது.

கடைத்தொகுதியில் அப்பெண்ணை அந்த ஆடவர் துரத்துவதை காணொளி ஒன்றில் பார்க்க முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமது வலது காலைப் பயன்படுத்தி அப்பெண்ணை அந்த ஆடவர் உதைத்தபோது கடைத்தொகுதியில் இருந்த மற்றவர்கள் அலறும் சத்தத்தைக் காணொளியில் கேட்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆடவர் உதைத்ததும் அப்பெண் தரையில் விழுந்தார்.

அந்த ஆடவரும் அவருடன் சேர்ந்த தரையில் விழுந்தார்.

அப்பெண் தரையில் கிடந்தபோது அந்த ஆடவர் மீண்டும் அவரை உதைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவ்விருவரையும் கூட்டம் சூழ்ந்துகொண்டது.

பெண்ணைத் தாக்கியவர் மீது கூடை ஒன்று வீசப்பட்டது.

இருவர் அந்தப் பெண்ணைப் பாதுகாக்க முன்வந்தனர்.

விலகிச் செல்லும்படி அவர்கள் அந்த ஆடவரிடம் கூறினர்.

வேறு சிலரும் அப்பெண்ணுக்கு உதவ விரைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்