தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் கருத்து: ‘பொய் சொல்லும் அவசியம் பெண்ணுக்கு இல்லை’

1 mins read
e511f00a-51c3-4d33-aa5e-eef114bd9b49
சென்ற ஆண்டு நிதிமன்ற வளாகத்தில் காணப்பட்ட கென் லிம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் இசைத் துறைப் பிரபலமான கென் லிம் சீ சியாங், ஆபாசமான பாலியல் கருத்துகளை வெளியிட்டார் என்று பெண் ஒருவர் கூறியிருந்தார்.

கென் லிம் மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தும் அவசியம் அந்த பெண்ணுக்கு இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) நீதிமன்றத்தில் கூறினார்.

ஹைப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை நடத்துபவராகவும் ‘சிங்கப்பூர் ஐடல்’ பாட்டுத் திறன் நிகழ்ச்சியில் நீதிபதியாகவும் பிரபலமடைந்த லிம், 1998லிருந்து 2013ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தகாத பாலியல் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் அவர் ஐந்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்குகிறார்.

மேலும், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் அவர், 25 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐந்து பெண்கள் தான் இழைத்ததாகக் கூறும் ஏழு குற்றங்களையும் 60 வயது கென் மறுக்கிறார்.

தற்போதைய நீதிமன்ற விசாரணை, 2012ல் ஒரு பெண்ணைத் தகாத முறையில் இழிவுபடுத்தியதாக கென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பானது. அப்போது அப்பெண்ணின் வயது 26.

2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹைப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கென், ‘நீங்கள் முன்னதாகப் பாலியல் உறவில் ஈடுபட்டதில்லையா’ என்றும் ‘உங்களுடன் இப்போதே நான் பாலியல் உறவில் ஈடுபட்டால் என்ன’ போன்ற கேள்விகளைக் கேட்டதாக சம்பந்தப்பட்ட மாது கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்