தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மனைவி உடனிருந்தபோதே இன்னொரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டவர்

எம்பிஎஸ் மின்தூக்கியில் பெண் மானபங்கம்: ஆடவருக்கு 6 நாள் சிறை

2 mins read
9d0facc7-220c-4d53-b964-e9a26b5c8000
மார்ச் 8ஆம் தேதி அதிகாலையில் மரினா பே சேண்ட்சின் 57ஆம் தளத்தில் ஆடவரும் அவரின் மனைவியும் நண்பர்களும் மது அருந்திவிட்டுச் சென்றபோது சம்பவம் நடந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரினா பே சேண்ட்சின் மின்தூக்கியில் ஆடவர் ஒருவர், பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக ஆறு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம்புரிந்தபோது 39 வயது சீன நாட்டவரான ஹு குவீ‌ஷெங் மின்தூக்கியில் அவருடைய மனைவியுடனும் நண்பர்களுடனும் இருந்தார். மற்றொரு பெண்ணின் பின்புறத்தைப் பார்த்த ஹு, மின்தூக்கியைவிட்டு வெளியேறியபோது அவரை மானபங்கம் செய்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹுவுக்கு ஆறு நாள் சிறைத்தண்டனை புதன்கிழமை (அக்டோபர் 22) விதிக்கப்பட்டது.

சமூக வருகை அனுமதி பெற்று சிங்கப்பூருக்கு வந்த அவர், மரினா பே சேண்ட்சில் மனைவியுடனும் நண்பர்களுடனும் தங்கியிருந்தார்.

மார்ச் 8ஆம் தேதி அதிகாலையில் மரினா பே சேண்ட்சின் 57ஆம் தளத்தில் உள்ள செ லா வி உணவக, மதுபானக்கூடத்தில் அவரும் மனைவியும் நண்பர்களும் மது அருந்திவிட்டுச் சென்றபோது சம்பவம் நடந்தது. அதிகாலை மணி 1.34க்கு மதுபானக்கூடத்தைவிட்டு வெளியேறி, மின்தூக்கிக்காக அவர்கள் காத்திருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் மின்தூக்கிக்காகக் காத்திருந்தார்.

மின்தூக்கிக்குள் நுழைந்தபோது மனைவியின் கையைப் பிடித்திருந்தார் ஹு. முதல் தளத்தில் மின்தூக்கியைவிட்டு வெளியேறியபோது, அனைவரும் வெளியேறுவதற்காகக் காத்திருந்த அவர், பெண்ணை மானபங்கம் செய்தார்.

அதிர்ச்சியடைந்த பெண், ஹுவை நிறுத்த முயன்றார். ஹோட்டல் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை அவர் நாடினார். அவர்கள் ஹுவை மின்தூக்கி முகப்பில் தடுத்துநிறுத்தினர். அதிகாலை மணி 2.50க்குக் கைதுசெய்யப்பட்ட ஹு, அன்று பிற்பகல் 2 மணிக்குப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மானபங்கம் செய்த குற்றத்திற்கு, ஒருவருக்கு மூவாண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் எவையேனும் இரண்டு அல்லது மூன்றும்கூட விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்