ரயிலில் சக பயணிமீது தண்ணீரைத் துப்பியதாக நம்பப்படும் மாது மனநலக் கழகத்தில் தடுத்துவைப்பு

1 mins read
32ba5e4e-e3a0-4ded-9804-77a4adb10fde
சக பெண் பயணியிடம் தொல்லைதரும் வகையில் நடந்துகொண்டதாக நம்பப்படும் சப்ரினா ஹான் மெஸன். - படங்கள்: SUMMERYEOW0573/இன்ஸ்டகிராம்

பெருவிரைவு ரயிலில் பெண் ஒருவர் போத்தலில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, நீரைச் சக பெண் பயணிமீது துப்பிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

ஜனவரி 16ஆம் தேதி, காலை 8 மணியளவில் சுவா சூ காங் பெருவிரைவு ரயில் நிலையத்தில் அச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 37 வயது பெண்ணின் பெயர் சப்ரினா ஹான் மெஸன்.

அவர்மீது ரயில் பயணிகளுக்குத் தொல்லைதரும் வகையில் நடந்துகொண்டதாகப் புதன்கிழமையன்று (ஜனவரி 28) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மேலும், அவரை மனநலப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், பெண் ஒருவர் நெகிழிப் போத்தலிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, நீரைப் பலமுறை துப்புவதும் அதனால் மற்ற பயணிகள் அவரிடமிருந்து விலகிச் செல்வதும் தெரிகிறது.

பொது இடத்தில் மற்றவர்களுக்குத் தொல்லைதரும் வகையில் நடத்துகொண்டால், குற்றம் புரிந்தவருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்