தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணவிலக்கு கேட்ட கணவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவிக்கு 8 மாதச் சிறை

1 mins read
5a4a5e51-a8d3-4225-a7b2-7051a95a4646
படம்: காவல்துறை -

மணவிலக்கு கேட்ட கணவனைத் தண்டிக்கும் நோக்கில் கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவிக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஹிமா நிசாவ் என்ற 29 வயது இந்தோனீசியப் பெண், 24 வயதான முகமது ரஹிமி சமீரை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

முகமது ரஹிமி மலேசியக் குடிமகன்.

தம்பதிக்கு இடையே திருமண உறவு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கசக்கத் தொடங்கியது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தம்பதிக்கு பிறந்த காண சிங்கப்பூரில் இருந்து முகமது ரஹிமி மார்ச் மாதம் இந்தோனீசியா சென்றார்.

இருப்பினும் தம்பதியின் உறவில் எந்த முன்னேற்றம் இல்லாததால், கணவரைக் காண ரஹிமா மார்ச் 22ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார்.

ஹோட்டலில் தங்கிய ரஹிமா கொதிக்கும் நீரை போத்தல் ஒன்றில் நிரப்பிக்கொண்டு புர்கா அணிந்தவாறு கணவரின் வீட்டிற்குச் சென்றார்.

ஆடவர் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவர் மீது நீரை ஊற்றினார் ரஹிமா.

வலியால் துடித்த அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சென்றார்.

ஆடவரின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ரஹிமா இந்தோனீசியாவிற்கு தப்பிச் செல்லும் முன்னரே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்