டோவர் வீவக வீட்டில் பெண்ணின் சடலம்

1 mins read
0c2f420f-4839-4968-88d1-c6662b6b6599
டிசம்பர் 2ஆம் தேதி இரவு 8 மணி அளவில், ஸ்‌ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, புளோக் 1ன் 11வது மாடியில் உள்ள அந்த வீட்டுக்கு வெளியே காவல்துறை அதிகாரிகள் பலர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டோவர் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் டிசம்பர் 2ஆம் தேதியன்று 30 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

டோவர் சாலையில் உள்ள வீட்டில் உதவி கேட்டு மாலை 5.10 மணி அளவில் அழைப்பு கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது அவ்வீட்டில் அப்பெண் சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டனர்.

அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக உதவி செய்யக்கூடியவர் என்று நம்பப்படும் 34 வயது ஆடவர் சிங்கப்பூரைவிட்டு சென்றுவிட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

மாண்ட பெண்ணும் அந்த ஆடவரும் ஒருவருக்கொருவர் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 2ஆம் தேதி இரவு 8 மணி அளவில், ஸ்‌ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, புளோக் 1ன் 11வது மாடியில் உள்ள அந்த வீட்டுக்கு வெளியே காவல்துறை அதிகாரிகள் பலர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த இடத்தைச் சுற்றி தடுப்பு போடப்பட்டிருந்தது.

விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்