தோ பாயோ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் 66 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் புளோக் 195 கிம் கியட் அவென்யூவில் நிகழ்ந்தது.
இதுதொடர்பாகப் புதன்கிழமை (அக்டோபர் 8) காலை 10.20 மணி அளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.
அப்பெண் மாடியிலிருந்து விழுந்து மாண்டதாகக் கூறப்படுகிறது.
அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.
வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த பெண்ணின் உடல் அருகில் மூவர் நின்றுகொண்டிருந்ததைக் காட்டும் படம் ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பெண்ணின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.