தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சுக்கு அறிமுகப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் வோங்

2 mins read
5ce2bdff-be35-4ce8-ae94-b4bad46fd7ae
பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் அவரது மனைவி, வெளியுறவு மற்றும் உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், வெளியுறவு அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிலீப்பின்ஸ் செல்கின்றனர். - படம்: சாவ்பாவ்

பிரதமர் லாரன்ஸ் வோங், ஜூன்4ஆம் தேதியிலிருந்து ஜூன் 5ஆம் தேதி வரை பிலிப்பீன்சுக்கு அறிமுகப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தத் தகவலைப் பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) வெளியிட்டது.

பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று நிதி அமைச்சருமான திரு வோங், பிலிப்பீன்ஸ் செல்கிறார்.

பிரதமர் வோங்கைக் கௌரவிக்கும் வகையில் பிலிப்பீன்சில் அதிகாரபூர்வ இரவு விருந்து உபசரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“பிலிப்பீன்சுடனான மிகச் சிறந்த பங்காளித்துவத்தை வலுப்படுத்த சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டை இப்பயணம் மறுஉறுதி செய்கிறது. சிங்கப்பூர்-பிலிப்பீன்ஸ் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் வட்டார மற்றும் உலகளாவிய மேம்பாடுகள் தொடர்பாகவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இருநாட்டுத் தலைவர்களுக்கும் இது நல்லதொரு வாய்ப்பை அளிக்கிறது,” என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

இருநாடுகளுக்கும் இடையில் உள்ள நட்புறவை பிரதமர் வோங்கின் பயணம் பிரதிபலிப்பதாக பிலிப்பீன்ஸ் அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை (ஜூன் 2) அறிக்கை வெளியிட்டது.

இருநாட்டுத் தலைவர்களும் புதன்கிழமையன்று (ஜூன் 4) சந்தித்துப் பேச இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்படும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் அலுவலகம் கூறியது.

“சுகாதாரம், பருவநிலை மாற்றம், அரசாங்கத்துறை ஒத்துழைப்பு போன்றவை தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடுவர்.” என்று அது குறிப்பிட்டது.

பிலிப்பீன்சின் தேசிய வீரர் ஹோசே ரிசாலின் கல்லறைக்குப் பிரதமர் வோங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிலிப்பீன்ஸ் அதிபர் மாளிகையில் பிரதமர் வோங்கிற்கு அதிகாரபூர்வ வரவேற்பு வழங்கப்படும்.

பிரதமர் வோங்குடன் அவரது மனைவி, வெளியுறவு மற்றும் உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், வெளியுறவு அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிலீப்பின்ஸ் செல்கின்றனர்.

பிரதமர் வோங் பிலிப்பீன்சில் இருக்கும்போது உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.

குறிப்புச் சொற்கள்