பெய்ஜிங்: உட்லண்ட்சில் முதியவரைத் தாக்கிய ஆடவரை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26), சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
சென்ற டிசம்பர் 21ஆம் தேதி, 73 வயதான ஃபூ சுவான் சிவ்வை 57 வயது டியோ எங் சியே தாக்கியதாகக் கூறப்படுகிறது.
உட்லண்ட்ஸ் மார்ட்டில் உள்ள ஃபோர்க் அண்ட் ஸ்பூன் உணவகத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.
குற்றம்சாட்டப்பட்ட டியோ எங் சியே, காவல்துறையின் காரில் வெள்ளிக்கிழமை காலை 10.40 மணியளவில் அங்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் முகக்கவசம் அணிந்திருந்தார்.
முன்னதாக, சண்டையில் படுகாயம் அடைந்த ஃபூ சுவான் சிவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

