திருமணம், பிள்ளைப்பேறு: ஆதரவை வலுப்படுத்த புதிய பணிக்குழு

திருமணம், பிள்ளைப்பேறு: ஆதரவை வலுப்படுத்த புதிய பணிக்குழு

2 mins read
88459d27-4ab5-4b97-9f22-032804edb11e
திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவை அணுகப்படும் விதத்தில் சமூகம் தழுவிய அளவில் மறுசீரமைப்பு தேவை என்றார் குமாரி இந்திராணி ராஜா. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதம் இதுவரை இல்லாத அளவாக சரிந்துள்ள நிலையில் திருமணம், பிள்ளைப்பேறு தொடர்பில் காணப்படும் சிக்கல்களை ஆய்வுசெய்ய புதிய பணிக்குழு அமைக்கப்படவுள்ளது.

பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது மக்கள்தொகை சரிவு குறைவடைந்துவரும் நாட்டின் கருவள விகிதம் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகள் தொடர்பில் குமாரி இந்திராணி உரையாற்றினார். 

அந்த அம்சங்களில் சிங்கப்பூரில் தொடரும் நிலையைக் கருத்தில்கொண்டு நாடு தனது தற்போதைய வழியை மாற்ற வேண்டுமானால், திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவை பார்க்கப்படும் விதம், ஆதரிக்கப்படும் முறை உள்ளிட்டவற்றில் சமூகம் தழுவிய அளவில் மறுசீரமைப்பு தேவை என்றார் அவர்.

“சமூகம் கையாள வேண்டிய முக்கியப் பிரச்சினை இது. குடும்பங்களை அமைப்பதும், மக்கள்தொகை சார்ந்த வளர்ச்சியை எட்டுவதற்குமான இந்த முயற்சிக்கு கொள்கைகள் மட்டும் தீர்வுகளை வழங்காது,” என்று அமைச்சர் இந்திராணி சொன்னார்.

2024ஆம் ஆண்டு 0.97ஆக இருந்த கருவள விகிதம் 2025ஆம் ஆண்டில் 0.87 என்ற அளவுக்குச் சரிந்துவிட்டது.

இதன் தொடர்பில்  உரையாற்றிய அமைச்சர், மறுசீரமைப்பு என்று தாம் குறிப்பிடுவன குறித்தும் அதற்கான நான்கு விரிவான நீண்டகால அணுகுமுறை குறித்தும் விளக்கினார்.

திருமணம், பிள்ளைப்பேறு தொடர்பில் வழங்கப்படும் அரசாங்க ஆதரவை மேலும் மேம்படுத்துவது; இவ்விரண்டைக் குறித்த ஆக்ககரமான மனநிலையை உருவாக்குவது; குடும்பநலன் சார்ந்த பணியிடப் பண்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் வேலை நிறுவனங்களுடன் செயலாற்றுவது; நிறைவாக இந்த இலக்கில் மொத்த சமூகத்தையும் ஈடுபடுத்துவதுஆகியவையே அவர் முன்வைத்த முக்கிய அணுகுமுறைகள்.

இந்த புதிய பணிக்குழுவிற்கு அமைச்சர் இந்திராணி தலைமை தாங்கவுள்ளார். குழு குறித்த கூடுதல் விவரங்கள் பகிரப்படும்.

குறிப்புச் சொற்கள்