பாட்டாளிக் கட்சி மூத்த உறுப்பினர் லிம் ஈ பிங் காலமானார்

பாட்டாளிக் கட்சி மூத்த உறுப்பினர் லிம் ஈ பிங் காலமானார்

1 mins read
210b3268-03f6-4e74-be5d-64351f5aee7b
திரு லிம் ஈ பிங் ஏற்கெனவே மூன்றுமுறை புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவந்ததாகப் பாட்டாளிக் கட்சி தெரிவித்தது. - படம்: பாட்டாளிக் கட்சி

பாட்டாளிக் கட்சியின் மூத்த உறுப்பினர் லிம் ஈ பிங், மே 29ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 86.

திரு லிம் புற்றுநோயால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

1959ஆம் ஆண்டு தமது 20வது வயதில் அவர் பாட்டாளிக் கட்சியில் சேர்ந்தார்.

திரு லிம் ஏற்கெனவே மூன்றுமுறை புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவந்ததாகவும் நாலாவது முறை ஏற்பட்ட புற்றுநோய் அவரது உயிரைப் பறித்துவிட்டதாகவும் பாட்டாளிக் கட்சி மே 29ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

திரு லிம் அவரது மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகளை விட்டுச்செல்கிறார்.

குறிப்புச் சொற்கள்