நாய்களை உடல் ரீதியாக துன்புறுத்தியோ பயத்தின் மூலமோ பயிற்சியளிக்கத் தேவையில்லை. அதற்கு மாற்றாக மனிதாபிமான வழிகளில் பயிற்சியளிக்கலாம்.
பயிற்சிகளை சிறப்பாக செய்ய நாய்களுக்கு உணவு, விளையாட்டுகள் போன்றவற்றை அறிமுகம் செய்து அவற்றை நல்லமுறையில் வளர்க்கலாம்.
இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றவும் தற்போது உள்ள பயிற்சித் திட்டங்களை மறு ஆய்வு செய்யவும் புதிய பணிக்குழு அமைக்கப்படவுள்ளது.
குறைந்தபட்ச எரிச்சல், குறைந்தபட்ச வெறுப்பு என்னும் ‘லீமா’ பயிற்சித் திட்டமும் பின்பற்றப்படவுள்ளது.
பயிற்சித் திட்டங்களை மறுஆய்வு செய்யவும் புதிய பணிக்குழுவில் நாய் பயிற்றுவிப்பாளர்கள், விலங்கு நல மருத்துவர்கள், விலங்கு நல அமைப்புகள் போன்றவர்கள் இருப்பார்கள்.
பணிக்குழுவை தேசியப் பூங்காக் கழகத்தின் கீழ் உள்ள விலங்குநல மருத்துவச் சேவையும் விலங்கு வதை தடுப்புச் சங்கமும் சேர்ந்து வழிநடத்தும்.
மேலும் நாய்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளும் மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய பணிக்குழு நாய் பயிற்றுவிப்பாளர்களுக்கு மட்டுமின்றி நாய்களை வீட்டில் வளர்ப்பவர்களுக்கும் நாய்கள் தொடர்பான புரிதல்களை அதிகரிக்க முயற்சி எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

