சின் சுவீ ரோடு சண்டை; இருவர் மீது கொலைக் குற்றம்

1 mins read
8d4fb0ba-aaad-4b49-9b2a-4c4b35c51afd
சின் சுவீ ரோடு சண்டை தொடர்பில் இருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சின் சுவீ ரோடு சண்டையில் 56 வயது நபர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் மீது கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 8ஆம் தேதி சின் சிவி ரோடு, புளோக் 51 உள்ள 17 மாடியில் ஏற்பட்ட சண்டையில் ஒருவரைக் கொன்றுவிட்டதாக டான் பூன் ஹுய், 58, போ சூன் கியாட், 59 ஆகிய இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தச் சண்டை அதிகாலை ஒரு மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 9) இருவர் மீதும் காணொளி வழியாக கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள டான், கழுத்துப் பட்டை அணிந்து படுக்கையில் படுத்தவாறு இருந்ததை காணொளி காட்டியது.

சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விரிவான விசாரணை நடத்துவதற்காக அவர்களை ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க அரசுத் தரப்பு அனுமதி கேட்டது. அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாண்டரின் மொழியில் பேசிய டான், தனது கால் வீங்கியிருப்பதால் நடக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்

அப்போது நீதிபதி, மருத்துவமனையில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறலாம் என்று அவரிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்