மாணவியைப் பின்தொடர்ந்து தொல்லை தந்த இளையர்

1 mins read
515170ed-fe94-4b71-a07f-f0f715d157a9
கெவின் காவ் என்ற 22 வயது மாணவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  - கோப்புப் படம்.

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகம் ஒன்றில், 17 வயது இளையர்கள் மூவருக்குத் தொல்லை தந்ததன் பேரில், அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கெவின் காவ் என்ற அந்த 22 வயது மாணவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கணினியின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான சட்டம், தொல்லைக்கு எதிரான பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட நபரை காவ், இணைய விளையாட்டு வழி 2021ல் தெரிந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத் திட்டம் ஒன்றின்கீழ் 2025ல் சிங்கப்பூர் வந்த காவ், அந்தப் பெண் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி எனத் தெரிந்துகொண்டார். அந்த இளம்பெண்ணின் வீட்டு முகவரியையும் கண்டுபிடித்தார்.

பல முறை அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து, வரம்பின்றித் தொலைபேசியில் அழைத்து, மற்ற பல வழிகளில் தொல்லை கொடுத்தார் காவ்.

காவ்வின் குற்றங்களுக்காக அவருக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதமோ, ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம். இது குறித்த தீர்ப்பை நீதிமன்றம் மார்ச் 4ஆம் தேதி அறிவிக்கும்.

குறிப்புச் சொற்கள்