தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளம் நெகிழ வைத்த சிறாரின் தேசப்பற்று!

1 mins read
bf1374ab-eec4-4664-9344-6aa9d6d57760
தேசிய உறுதிமொழியை எடுத்து மனத்தைக் கவர்ந்த ‘ஸ்கூல்4கிட்ஸ்’ பாலர்பள்ளி மாணவர்கள்.  - படம்: ‘ஸ்கூல்4கிட்ஸ்’ பாலர் பள்ளி நிறுவனம்

சிங்கப்பூர் தேசிய உறுதிமொழியை பொதுவாக பள்ளியில் எடுத்த நினைவுகள் நம்மில் பலருக்கும் ஞாபகம் இருக்கும்.

அதே பற்று, பெருமிதத்துடன் பாலர்பள்ளி மாணவர்கள் தேசிய உறுதிமொழியை வாசித்து ‘டிக் டாக்’ வலைத்தளத்தில் பல உள்ளங்களைக் கவர்ந்துள்ளனர்.

‘ஸ்கூல்4கிட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த 18 பாலர்பள்ளிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி, தேசிய தினத்தை முன்னிட்டு அந்தச் சிறப்பு முயற்சியை மேற்கொண்டன.

அந்தக் காணொளியை ‘ஸ்கூல்4கிட்ஸ்’ நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ‘டிக் டாக்’ தளத்தில் பதிவேற்றம் செய்தது.

தேசிய உறுதிமொழியை அன்றாடம் குழந்தைகள் எடுப்பதால் அந்த வழக்கம் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று எனத் தெரிவித்தது ‘ஸ்கூல்4கிட்ஸ்’ நிறுவனம்.

“குழந்தைகள் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு தெளிவாக உச்சரிக்க முடிவதை உறுதிசெய்வது ஒரு சவாலாக இருந்தது,” என்று நிறுவனம் தமிழ் முரசிடம் தெரிவித்தது.

குழந்தைகளின் சில செய்கைகள் மனத்தை நெகிழவைத்த தருணங்களாகவும் அமைந்ததாக நிறுவனம் பகிர்ந்துகொண்டது.

இருப்பினும், ஆசிரியர்களின் ஊக்கத்தால் சில பயிற்சிகளுக்குப் பிறகு மாணவர்கள் சுறுசுறுப்பாகப் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல பெற்றோரும் சமூக உறுப்பினர்களும் குழந்தைகளின் முயற்சியால் தாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதை நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி அனைவரும் சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், நமது இள நெஞ்சங்கள் தேசத்தைக் கொண்டாடுவதில் ஒரு பங்கை வகிக்க முடியும் என்பதை அந்த முயற்சி நினைவூட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்