பெண் பாலியல் ஊழியராக நடித்து மூன்று ஆடவர்களிடம் 20 வயது ஷான் ஓ யான் ஷே மொத்தம் $800 ஏமாற்றியுள்ளார்.
பிடிபட்டவுடன் மூவருக்கும் பணத்தைத் திருப்பி வழங்கிய ஷான், அதே போன்று மேலும் ஆறு முதல் ஏழு பேரை ஏமாற்றியிருப்பதை காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.
தமது குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டு, அந்தச் சம்பவங்கள் தொடர்பாகத் தாமாக முன்வந்து அவர் $1,470 தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தொடர்பான இரு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஷான் ஒப்புக்கொண்டார். பணமோசடி தொடர்பான மற்றொரு வழக்கிலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மூன்றாவது ஆடவர் தொடர்புடைய ஏமாற்றுக் குற்றச்சாட்டு உள்பட மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின்போது பரிசீலிக்கப்படும்.
இணைய விளம்பர இணையத்தளமான லோகாண்டோவுவில் 19 வயது பாலியல் சேவை வழங்கும் பெண்ணாக ஷான் விளம்பரம் செய்தார். விளம்பரத்தைப் பார்த்த இருவர், டெலிகிராம் வழியாக அவரைத் தொடர்புகொண்டனர். அதில் ஒருவர் 2024 ஜூலை 1 அன்று ஷானுக்கு $550 அனுப்பினர். மற்றவர் அதற்கடுத்த மாதம் $100 அனுப்பினார். மூன்றாமவர் பற்றிய விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
மற்றொரு வழக்கில், நீதிமன்ற ஆவணங்களில் “x” என்று அடையாளம் காணப்பட்ட அறிமுகமில்லா ஒரு மாது ஷானைத் தொடர்புகொண்டு வங்கிக்கணக்கு திறந்து தர $2,000 தருவதாகக் கூறியுள்ளார். அவரும் இணைய வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி அந்தக் கணக்கில் $34,675 போடப்பட்டது அது பின்னர் மாற்றப்பட்டது. அதில் $34,650 மோசடிக்குப் பலியானவரது தொகை எனத் தெரியவந்தது. அப்பணம் மீட்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையில் ‘எக்ஸ்’ அவருக்குப் பணம் செலுத்தத் தவறிவிட்டார் என்று கூறினார்.
ஷானுக்கு சீர்திருத்தப் பயிற்சி ஏற்றதா என்பதை மதிப்பிடுவதற்கு அறிக்கையைக் கோருமாறு அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
“அக்டோபர் 7ஆம் தேதி ஷானுக்கு தண்டனை விதிக்கப்படும்.