சிங்கப்பூரில் மார்ச் 23 பிற்பகலில் நிழலில்லாத் தருணம்

சிங்கப்பூரில் மார்ச் 23 பிற்பகலில் நிழலில்லாத் தருணம்

1 mins read
ca36a16e-0321-4afc-9a7b-bad772ff1377
காலாங் கடைத்தொகுதிக்கு வெளியே நடமாடும் மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் ‘லஹைனா நூன்’ எனும் நிகழ்வு மார்ச் 23ஆம் தேதியன்று பிற்பகல் 1.11 மணிக்கு இடம்பெற்றது. அந்த நேரத்தில் ஒருவரின் நிழல் குறைந்தபட்ச அளவில் மட்டுமே தென்படும்.

நிழலில்லா தினம் என்றும் அழைக்கப்படும் இது, ஓர் இயற்கையான நிகழ்வு. இந்தத் தருணத்தில் தடி அல்லது விளக்குக் கம்பம் போன்ற செங்குத்தாக நிற்கும் பொருள்களுக்கு நிழல் இருக்காது.

இந்த நிகழ்வு செப்டம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 12.58 மணிக்கும் இடம்பெறும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் புவியியல் கற்பிக்கும் பேராசிரியர் மத்தாயஸ் ரோத் கூறினார்.

இந்த நிகழ்வு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது மலேசியாவின் புத்ரா ஜெயாவில் மார்ச் 27ஆம் தேதியன்றும், கோலாலம்பூரில் மார்ச் 28ஆம் தேதியன்றும் நிகழும் என்று அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்