பிர்ச் சாலையில் களைகட்டும் தீபாவளிச் சந்தை

மங்கலத் திருநாளான தீபாவளி வந்துவிட்டால் லிட்டில் இந்தியா களைகட்டிவிடும்.

உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கக் காத்திருக்கும் மக்கள் பிர்ச் சாலையில் அமைந்திருக்கும் தீபாவளிச் சந்தையை வலம்வந்து கொண்டாட்டத்துக்குத் தயாராவது வழக்கம். இம்முறை பிர்ச் சாலையில் அமைந்துள்ள தீபாவளிச் சந்தையின் சில பகுதிகளில் முதல்முறையாகக் குளிரூட்டப்பட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அழகு ஆயிரம் அடங்கிய ஆடைகள்

இந்த ஆண்டு பெண்கள் ஆடைகளின் புதுவரவில் அதிகமாக வந்துள்ளது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பாட் அணியும் சுடிதார் வடிவமைப்பு. நீண்ட கைகளுடைய ஆடையாகத் தோற்றமளிக்கும் அந்த வடிவமைப்பில், பெண்களைக் கவரும் வண்ணப் பூக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 80 வெள்ளியிலிருந்து தொடங்கும் அந்த ஆடையை, பெரும்பாலும் தேக்கா சந்தையில் இருக்கும் கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல புதிதாக நயரா கட் சுடிதார் வடிவமைப்பும் ஆலியா பாட் வடிவமைப்பு போல தோற்றமளிக்கிறது. ஆனால், அதில் சற்று வித்தியாசமாக சட்டையின் பக்கவாட்டில் வெட்டு ஏற்பட்டது போன்ற வடிவமைப்பு உள்ளது. வழக்கமாக விற்கப்படும் லெஹெங்கா ஆடை ரவிக்கைகளுக்குப் புதிதாக மணிகள் தொங்குவது போன்ற வடிவமைப்பையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். அனார்கலி மற்றும் ஷராரா உடைகள் இவ்வாண்டு மீண்டும் வந்துள்ளன.

கண்கவர் அரபு மருதாணி

தீபாவளி என்றாலே மருதாணிக்குத் தனி இடமுண்டு. ஆடை, அணிகலன்களை அணிந்தாலும் கைகளில் மருதாணி இடுவதால் ஒருவரின் ஒப்பனை முழுமை பெறுகிறது. இவ்வாண்டின் புதிய மருதாணி வடிவமைப்பு, அரபு மலர்கள். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எளிய வடிவமைப்புகளை விரும்புவதாக மருதாணி இடும் கலைஞர்கள் கூறினர். அரபு மருதாணி இந்திய மருதாணி வடிவமைப்பிலிருந்து சற்று மாறுபட்டது. அரபு மருதாணி வடிவமைப்பு உள்ளங்கையில் அதிகம் இடப்படும். மேலும், மருதாணிக்கு அப்பாற்பட்டு வாடிக்கையாளர்கள் அதிகம் பச்சை குத்துவதற்கான தற்காலிக வடிவமைப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். ‘இந்தியன் இங்ஸ்’ கடையில் ‘ஜாகுவா மை’ பயன்படுத்தப்படும் தற்காலிக பச்சை குத்தும் வடிவங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

குளிரூட்டப்பட்ட வசதி, வியாபாரம் மந்தம்

சந்தையின் பின்பகுதியில் மட்டும் குளிர்சாதன வசதி அமைந்துள்ளது. ஆனால் அங்கு குறைவான கடைகள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில் மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு மனை காட்சியறைகள் அடங்கியுள்ளன. சந்தையின் பின்புறத்தில் இருப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அங்கு கடைகள் இருப்பது தெரியவில்லை. ‘அப்ரகதப்ரா’ எனும் ஆடைகள் கடையின் உரிமையாளரான திருவாட்டி அன்னே மெரின் முதல்முறையாக தீபாவளிச் சந்தையில் ஆடைகளை விற்று வருகிறார். வீட்டு அடிப்படையிலான வணிகத்தில் ஈடுபட்டு வரும் அவர் தன் கடை, சந்தைக்குப் பின் புறத்தில் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்குத் தன் கடையைப் பற்றி அறிவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறி வருந்தினார். மேலும், குளிரூட்டப்பட்ட வசதி இருந்தாலும் அது பெரிதாக உதவவில்லை என்றார்.

உணவுப் பட்டியலில் புதுமை

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு புதிய உணவு வகைகளுடன் சந்தை பொலிவடைந்துள்ளது. மசாலா தேநீர், பானி பூரி, ஆகிய உணவுகளுக்குப் பெயர்போன ‘சாய் ஓ’கிளாக்’ (Chai O’Clock) கடையில் இம்முறை வித்தியாசமான உணவு வகைகளான டாஹி பூரி, பாவ் பஜ்ஜி, வட பாவ், கோலி சோடா, சமோசா போன்றவை விற்கப்படுகின்றன. கடையின் உரிமையாளரான கிரிஷன் பிரகாஷ் நம்பியார், 26, “தமிழ் மற்றும் வட இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நாங்கள் இந்த ஆண்டு எங்கள் கடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் சுவரொட்டிகளை வைத்துள்ளோம்,” என்றார்.

‘பார்ட்டி பூரி’ கடை உரிமையாளரான அனில் ரவீந்திரன், 29, சிங்கப்பூரர்களின் நவீன ரசனைக்கேற்ப உள்ளூர் சுவைகள் அடங்கியுள்ள பானி பூரிகளை விற்பதைக் காணலாம். ‘ஒண்டே ஒண்டே’ பானி பூரி அவரது வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் ஒன்று. சைவ உணவுப் பிரியர்களுக்காக போலி இறைச்சியால் செய்யப்பட்ட பாவ் பஜ்ஜிகளையும் விற்பதாக அவர் கூறினார்.

அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து தீபாவளிக்கு முந்தைய தினம் வரை செயல்படும் சந்தை, இவ்வாண்டு புதிய பாணியில் வாடிக்கையாளர்களுக்குப் பொருள் வாங்கும் அனுபவத்தைத் தரும் என்று கடைக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!