மரடோனாவின் 'கடவுளின் கை' பந்து: ஏலத்தில் $4.81மி. வரை போகக்கூடும்

மரடோனாவின் 'கடவுளின் கை' பந்து: ஏலத்தில் $4.81மி. வரை போகக்கூடும்

1 mins read

காலஞ்சென்ற அர்ஜெண்டின காற்பந்து வீரர் டியேகோ மரடோனா, 1986 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய கோல் போட பயன்படுத்தப்பட்ட பந்து அடுத்த மாதம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

அதில் அந்தப் பந்துக்கு £3 மில்லியன் (S$4.81மி.) வரை கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக் குத்தகை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும். ஆனால் விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து இணையத்தில் பதிவு செய்யலாம்.

"இந்தப் பந்துடன் தொடர்புடைய வரலாற்றைப் பார்க்கையில், ஏலத்தில் விடப்படும்போது இதற்கு அதிக விலை கோரப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஏலத்தை நடத்தும் நிறுவனத் தலைவர் கிரஹம் பட் கூறினார்.

அந்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றது. மரடோனாவின் சர்ச்சைக்குரிய கோல் செல்லுபடியாகும் என்று நடுவர் அலி பின் நாசர் கூறினார். 1986 உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினாதான் வென்றது.

Watch on YouTube