இரண்டாவது ஒருநாள் போட்டியில் பல்வேறு சாதனைகள் தகர்ந்தன

விசாகப்பட்டினம்: வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்க்க, இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமாகத் தோற்றது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 26 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் எதையும் இழக்காமல் 11 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் மாற்றி எழுதப்பட்டன.

# இந்தியாவின் 117 ஓட்டங்களே ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக  அவ்வணி  எடுத்த ஆகக் குறைவான மூன்றாவது ஓட்ட எண்ணிக்கை. முன்னதாக, 1981ஆவது ஆண்டில் 63 ஓட்டங்களிலும் 2000ஆவது ஆண்டில் 100 ஓட்டங்களிலும் இந்தியா ஆட்டமிழந்தது. அவ்விரு போட்டிகளும் சிட்னியில் நடந்தன.

# உள்ளூரில் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆகக் குறைவான நான்காவது ஓட்ட எண்ணிக்கை இதுதான். 78 (1986, இலங்கை), 100 (1993, வெஸ்ட் இண்டீஸ்), 112 (2017, இலங்கை) ஆகியவை பட்டியலின் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

# ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஐந்து விக்கெட் வீழ்த்தியவர்களில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறினார் மிட்செல் ஸ்டார்க் (9 முறை). பாகிஸ்தானின் வக்கார் யூனுசும் (13 முறை) இலங்கையின் முரளிதரனும் (10 முறை) முதலிரு இடங்களில் உள்ளனர்.

# எஞ்சியிருந்த பந்துகளின் அடிப்படையில்  ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்குஇதுவே ஆக மோசமான தோல்வி. இரண்டாவது போட்டியில் 234 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

# ஓவர்களின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணிக்குக் கிட்டிய ஆக வேகமான மூன்றாவது வெற்றி இது. முன்னதாக, 2004ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 7.5 ஓவர்களில் 66 ஓட்டங்களை எட்டியும் 2013ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் 9.2 ஓவர்களில் 71 ஓட்டங்களை எட்டியும் அவ்வணி வென்றிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!