ஆசியான் காற்பந்துப் போட்டி: திமோர் லெஸ்டேயை வென்றது சிங்கப்பூர்

ஆசியான் காற்பந்துப் போட்டி: திமோர் லெஸ்டேயை வென்றது சிங்கப்பூர்

1 mins read
af438541-422b-4430-85b9-afc8ab5825c4
திமோர் லெஸ்டேக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூரின் முதல் கோலைப் போட்டார் இல்ஹான் ஃபாண்டி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியான் காற்பந்துப் போட்டியின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் திமோர் லெஸ்டேயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது சிங்கப்பூர்.

இந்த ஆட்டம் திங்கட்கிழமை (ஜூலை 27) ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெற்றது. எனினும், இப்போட்டியில் மேலும் சவாலான அணிகளை சிங்கப்பூர் சந்திக்க வேண்டியிருக்கிறது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) உலகக் காற்பந்துத் தரவரிசையில் 175வது இடத்தில் உள்ள கம்போடியாவை சிங்கப்பூர் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. திமோர் லெஸ்டே 201வது இடத்திலும் சிங்கப்பூர் 148வது இடத்திலும் இருக்கின்றன.

திமோர் லெஸ்டேக்கு எதிரான ஆட்டத்தின் முற்பாதியில் சிங்கப்பூர் சரியாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 41வது நிமிடத்தில் சிங்கப்பூரை முன்னுக்கு அனுப்பினார் இல்ஹான் ஃபாண்டி. இது, 23 வயது ஃபாண்டி தேசிய அணிக்கு விளையாடிய 27 ஆட்டங்களில் போட்ட எட்டாவது கோலாகும்.

பிறகு 56வது நிமிடத்தில் சோங் உய்-யங் இரண்டாவது கோலைப் போட்டு சிங்கப்பூரின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) வியட்னாமை அதன் தலைநகர் ஹனோயில் சந்திக்கும். அதன் பிறகு ஜாலான் புசார் விளையாட்டரங்கில் ‘ஏ’ பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் இந்தோனீசியாவுடன் மோதவுள்ளது சிங்கப்பூர்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்துசிங்கப்பூர்வெற்றிஆசியான்தென்கிழக்காசியா