தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களைச் சிறப்பித்த விருதுகள்

2 mins read
6dfa0e22-247c-4ef1-8b0c-23eb0a4ab2d6
ஓட்டப்பந்தய வீராங்கனையான 28 வயது சாந்தி பெரேரா, தலைசிறந்த விளையாட்டுச் சாதனை விருதைப் பெற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

விளையாட்டிலும் கல்வியிலும் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் சிறந்து விளங்கி சாதனை படைத்துள்ள தலைசிறந்த மாணவர்களைக் கௌரவிக்‌கும் நோக்‌கத்துடன் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி தனது வருடாந்திர விருது விழாவை புதன்கிழமை (பிப்ரவரி 5) நடத்தியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நிரந்தரச் செயலாளரும் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் தலைவருமான தியோ சின் வூன் கலந்துகொண்டார்.

தலைசிறந்த விளையாட்டுச் சாதனை விருதை மொத்தம் 21 விளையாட்டு வீரர்களும் முன்னாள் மாணவர்களும் பெற்றனர். ‘சிங்கப்பூரின் மிக வேகமான பெண்’ என்ற பட்டத்தைக்‌ கொண்ட சாந்தி பெரேரா, 28, அனைத்துலக அளவில் பல பதக்கங்களை வென்றதுடன் பல தேசிய சாதனைகளையும் படைத்துள்ளார்.

இவ்விருதைப் பெற்ற மற்றொருவர், சிங்கப்பூரின் வாள்வீச்சு வீராங்கனையான அமிதா பெர்தியர், 24. சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதோடு, இதுவரை இரு ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்து போட்டியிட்ட இவர்கள் இருவரும் சிறப்பு விருதுகளுடன் கௌரவிக்‌கப்பட்டனர்.

விருது விழாவில் வேறு சில விருதுகளும் வழங்கப்பட்டன.

மூ சுன் சோங் தலைசிறந்த மாணவர்-விளையாட்டு வீரர் விருதை உயர்நிலைப்பள்ளி பிரிவில் கோல்ஃப் விளையாட்டாளர் சென் ஸிங்டோங்கும் மேசைப்பந்து விளையாட்டாளர் நிக்கலஸ் டானும் பெற்றனர். இவ்விருதை உயர்கல்வி பிரிவில் வூஷு வீராங்கனை ஸியென் லாவும் முக்குளிப்பு விளையாட்டாளர் மேக்ஸ் லீயும் பெற்றனர்.

அனபல் ஃபென்ஃபதர் (Annabel Pennefather) உன்னத விருதை வாள்வீச்சு விளையாட்டு வீரர்களான ஷுங் கெமெயும் ஃபில்சா ஹிடாயா நூர் அன்வாரும் பெற்றனர். டான் ஹவ் லியாங் உன்னத விருதை பேட்மிண்டன் விளையாட்டாளர் ஜோஹன் பிரஜோகோவும் வாள்வீச்சு விளையாட்டு வீரர் பிரான் ஷீமும் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்