பூப்பந்து: இன்ப அதிர்ச்சி தந்த லோ

1 mins read
b3a1f35e-af92-48e7-b9c5-bc4b04e0faea
சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ, ஆண்கள் ஒற்றையர் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சீனாவின் ‌ஷி யூச்சியை வென்று ஆசியப் பூப்பந்துப் போட்டியின் (Badminton Asia Championships) அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இரண்டாவது செட்டில் சரியாக விளையாடாதபோதும் இறுதியில் வெற்றிபெற்றார் லோ. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) 21-19, 13-21, 21-16 எனும் ஆட்டக்கணக்கில் அவர் வென்றார்.

2023ஆம் ஆண்டு ஆசியப் பூப்பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் இந்தோனீசியாவின் ஆன்டனி கிந்திங்கிடம் தோல்வியடைந்தார். இம்முறை சனிக்கிழமை (ஏப்ரல் 12) அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் குன்லாவுட் வித்திட்சார்னுடன் மோதுவார் லோ.

குறிப்புச் சொற்கள்