2007ஆம் ஆண்டில் அறப்பணிக்காக லயனல் மெஸ்ஸி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
நாள்காட்டிக்காக அந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.
படமெடுக்கும் பணிகள் பார்சிலோனா குழுவின் நூ காம்ப் விளையாட்டரங்கில் உள்ள ஆட்டக்காரர்களுக்கான ஆடை மாற்றும் அறையில் நிகழ்ந்தது.
அப்போது மெஸ்ஸிக்கு 20 வயது. அவர் இன்னும் நட்சத்திர வீரராகப் பெயர் எடுத்திருக்கவில்லை.
நாள்காட்டிக்காக படமெடுத்தபோது கைக்குழந்தை ஒன்றை மெஸ்ஸி கையில் தூக்கிவைத்துக்கொண்டிருந்தார்.
அந்தக் குழந்தைதான் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்சுக்கு எதிராக அனைவரும் கரவொலி எழுப்பும் அளவுக்கு கோல் போட்ட ஸ்பானிய ஆட்டக்காரரான லமின் யமால்.
குழந்தை லமின் யமாலை மெஸ்ஸி குளிப்பாட்டுவது போலவும் படங்கள் எடுக்கப்பட்டன.

