உருட்டுப்பந்து: சார்மெய்ன் சாங்குக்குத் தங்கம்

1 mins read
6b4b378a-3d84-4ce7-a70b-c24e66ffa2e3
தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை சார்மெய்ன் சாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் உருட்டுப்பந்து இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை சார்மெய்ன் சாங் தங்கம் வென்றார்.

ப்ளூ-ஓ ரிதம் & பவுல் ராட்சாயோதின் அரங்கில், சாங் மலேசியாவின் நடாஷா ரோஸ்லானை இறுதிப் போட்டியில் 234-191 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.

அரையிறுதிப் போட்டியில் தோல்வி கண்ட மற்றொரு சிங்கப்பூரரான கொலின் பீயும் இந்தோனீசியாவின் ஷாரன் லிமான்சந்தோசோவும் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்