சிங்கப்பூரில் களமிறங்கும் பிரேசில் காற்பந்து நட்சத்திரங்கள்

சிங்கப்பூரில் களமிறங்கும் பிரேசில் காற்பந்து நட்சத்திரங்கள்

படம்: இபிஏ

30 Oct 2026 - 6:40 pm

1 mins read

சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறும் ‘மிசுஹோ புளூ சேலஞ்’ காற்பந்துத் தொடரில் புகழ்பெற்ற பிரேசில் நட்சத்திரங்கள் விளையாடவுள்ளனர்.

சிங்கப்பூரில் களமிறங்கும் தங்கள் அணியின் விவரங்களைப் பிரேசில் பயிற்சியாளர் கார்லோ அன்சலோட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்டார்.

ரியால் மட்ரிட் வீரர்கள் வினிசியஸ் ஜூனியர், எண்ட்ரிக், ஆர்சனல் வீரர்கள் கேப்ரியல் மகல்யேஸ், புருனோ கிமரேஸ், பார்சிலோனாவின் ரஃபின்யா ஆகியோர் பிரேசில் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

26 பேர் கொண்ட அணியில் 23 வயதுக்குட்பட்ட 15 வீரர்கள் உள்ளனர்.

உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

நான்கு ஆட்டங்கள் கொண்ட காற்பந்து தொடர் நவம்பர் 13 முதல் 17 வரை நடக்கிறது. அவை அனைத்தும் தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது.

நவம்பர் 13ஆம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி பராகுவேயை எதிர்கொள்கிறது.

நவம்பர் 14ஆம் தேதி பிரேசிலும் ஜப்பானும் மோதுகின்றன.

அண்மைய உலகக் கிண்ணத் தொடரில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது.

நவம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூர் அணி பிரேசிலை எதிர்கொள்கிறது. அதே நாளில் உலகத் தரவரிசையில் 17ஆவது இடத்திலுள்ள ஜப்பான் 34ஆவது இடத்திலுள்ள பராகுவேயை சந்திக்கிறது.

ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகளைக் காலாங் இணையத்தளத்தில் வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்