கிரிக்கெட்: 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

கிரிக்கெட்: 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

படம்: ஏஎஃப்பி

13 Nov 2026 - 8:34 pm

2 mins read

ஆக்லாந்து: இந்தியா- நியூசிலாந்து அணிளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 244ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மவுண்ட் மாங்கானுயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பந்தடித்தது. 50 ஓவர்களில் 333 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அது இழந்தது.

தொடக்க வீரர் டிம் சீபெர்ட் 48 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய வில் யங், 108 பந்துகளில் 125 ஓட்டங்கள் விளாசினார்.

இந்தியா தரப்பில் குர்னூர் பிரார், அகிப் நபி, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 334 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூவரும் ஓட்டங்கள் ஏதும் எடுக்கவில்லை.

பின்னர், ருத்துராஜ் கெய்க்வாட்டும் வெளியேறினார். இதனால் இந்திய அணி 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்தது.

இறுதியில் இந்திய அணி 26.4 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்