கிரிக்கெட்: ஐசிசி தலைவராக ஜெய்ஷா மீண்டும் தேர்வு

கிரிக்கெட்: ஐசிசி தலைவராக ஜெய்ஷா மீண்டும் தேர்வு

படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2026 - 5:45 pm

1 mins read

புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய்ஷா இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாலியில் திங்கட்கிழமை (நவம்பர் 16) நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் பொறுப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளரான திரு ஷா, 2024ஆம் ஆண்டில் முதன்முறையாக ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 35. இதன் மூலம், அந்தப் பதவியை வகித்த ஆக இளைய தலைவர் என்ற பெருமையைத் திரு ஷா பெற்றார்.

இரண்டாண்டுகள் கொண்ட அந்தப் பதவிக்காலத்தில், திரு ஷா 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவதை மேற்பார்வையிடுவார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிரிக்கெட் திரும்புவது, கிரிக்கெட் விளையாட்டைப் புதிய ரசிகர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான அசாதாரண வாய்ப்பை வழங்குவதாகத் திரு ஷா கூறினார்.

மேலும், இது புதிய தலைமுறை ஆட்டக்காரர்களையும் ரசிகர்களையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெய்ஷா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனாவார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்