காற்பந்து ஆட்டங்களைத் தானே ஒளிபரப்ப ‘இபிஎல்’ திட்டம்

காற்பந்து ஆட்டங்களைத் தானே ஒளிபரப்ப ‘இபிஎல்’ திட்டம்

1 mins read
b54ace27-3107-4f76-b47f-acd9bf1578e8
அண்மையில் நடந்த இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்று. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்து அமைப்பு, சிங்கப்பூரில் ஆட்டங்களைத் தானே ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீகின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் மாஸ்டர்ஸ், ஃபைனேன்‌ஷியல் டைம்ஸ் ஊடகக் காற்பந்து வர்த்தகப் பிரிவின் மாநாட்டில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) இதனை அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதன்முறையாகத் தாங்களே ஆட்டங்களை நேரலை முறையில் வழங்கப்போவதாக அவர், இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் உள்ள பெனின்சுலா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சொன்னார். ஸ்டார்ஹப் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூரில் இந்தச் சேவையை வழங்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமை ஸ்டார்ஹப்பிடம்தான் உள்ளது.

“ஸ்டார்ஹப்புடன் எங்களுக்கு ஆறாண்டுகால ஒப்பந்தம் உள்ளது. அது, சிங்கப்பூரில் கம்பிவட ஒளிவழிகளை வழங்கும் இரு நிறுவனங்களில் ஒன்றாகும். அடுத்த பருவத்திலிருந்து பிரிம்ஃபிளிக்சுக்குப் (Premflix) பதிலாக பிரிமியர் லீக் பிளஸ் (Premier League Plus) வழங்கப்படும்,” என்று திரு மாஸ்டர்ஸ் கூறினார். 2022ஆம் ஆண்டிலிருந்து 2028ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பருவமும் பிரிமியர் லீக் ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமை தற்போது ஸ்டார்ஹப்பிடம் உள்ளது.

இதுகுறித்து தி அத்லெட்டிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், தொலைக்காட்சி அல்லது மடிக்கணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய புதிய செயலி ஒன்றில் ஒரு பருவத்தின் எல்லா (380) ஆட்டங்களுடனும் சம்பந்தப்பட்ட மற்ற நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம் என்றார் திரு மாஸ்டர்ஸ். 24 மணிநேரமும் இயங்கும் ஒளிவழி ஒன்று வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்