எஃப் 1: உலக வெற்றியாளர் கிண்ணத்தை நெருங்கும் கிமி

எஃப் 1: உலக வெற்றியாளர் கிண்ணத்தை நெருங்கும் கிமி

படம்: ராய்ட்டர்ஸ்

26 Oct 2026 - 7:15 pm

1 mins read

ஆஸ்டின்: அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் கிமி அன்டோனெல்லி வெற்றி பெற்றார். இதன் மூலம் இப்பருவத்தில் 365 புள்ளிகள் குவித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கிமி.

இன்னும் இரண்டு புள்ளிகள் எடுத்துவிட்டால் இப்பருவத்திற்கான உலக வெற்றியாளர் கிண்ணத்தை 20 வயதான கிமி கைப்பற்றுவார்.

அடுத்த வாரம் மெக்சிகோவில் நடக்கும் பந்தயத்தில் அந்தப் புள்ளிகளைக் கிமி குவித்துவிடுவார் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அப்படி நடந்துவிட்டால் ஃபார்முலா ஒன் கார் பந்தய வரலாற்றில் ஆக இளம் வயதில் உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

இதற்கு முன்னர் செபாஸ்டியன் வெட்டல் தனது 23வது வயதில் உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்றார்.

“உலக வெற்றியாளர் கிண்ணத்தை நெருங்கிவிட்டதால் கவனக் குறைவாக இருப்பேன் என நினைத்துவிடக் கூடாது. எனக்கு ஒவ்வொரு பந்தயமும் முக்கியமானது. வெற்றியுடன் பருவத்தை முடிப்பதே எனக்கு மகிழ்ச்சி தரும்,” என்றார் கிமி.

இந்தப் பருவத்தில் இன்னும் ஐந்து பந்தயங்கள் மீதமுள்ளன. இந்தப் பருவத்தில் இதுவரை ஒன்பது பந்தயங்களில் கிமி வெற்றிபெற்றுள்ளார்.

ஆஸ்டின் நகரில் நடந்த பந்தயத்தில் ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பிடித்தார்.

குறிப்புச் சொற்கள்