எஃப் 1: ஆக இளவயதில் உலக வெற்றியாளரான கிமி

எஃப் 1: ஆக இளவயதில் உலக வெற்றியாளரான கிமி

படம்: இபிஏ

02 Nov 2026 - 6:25 pm

1 mins read

மெக்சிகோ சிட்டி: ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் கிமி அன்டோனெல்லி சாதனை படைத்துள்ளார்.

மிக இளவயதில் உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்று கிமி அசத்தியுள்ளார். இப்பருவத்தில் இதுவரை அவர் 380 புள்ளிகள் குவித்துள்ளார்.

மெர்சிடிஸ் அணியின் கிமிக்கு இப்போது 20 வயது. இதற்கு முன்னர் செபாஸ்டியன் வெட்டல் தனது 23வது வயதில் உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்றிருந்தார்.

மெக்சிகோவில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடந்த பந்தயத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

பந்தயத்தின் தொடக்கத்திலேயே அனல் பறந்தது. பல இடங்களில் அதிரடியாக வீரர்கள் செயல்பட்டனர்.

பந்தயத்திற்கு நடுவே விபத்தும் ஏற்பட்டது. அதனால் பந்தயம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்துப் பந்தயத்தை வென்றார். இரண்டாம் இடத்தில் ஃபெராரி அணியின் லூயிஸ் ஹேமில்டன் வந்தார். மூன்றாம் இடத்தை கிமி பிடித்தார்.

பந்தயத்தை முடித்தவுடன் கிமி மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். “என்னால் பேச முடியவில்லை. இது ஒரு சிறப்பான பருவம். ஹேமில்டன், வெர்ஸ்டாப்பனுடன் வெற்றிமேடையைப் பகிர்ந்துகொண்டது பெருமையாக உள்ளது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

73 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உலக வெற்றியாளர் ஆவது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் ஆல்பர்ட்டோ அஸ்காரி 1953ஆம் ஆண்டு இப்பட்டத்தை வென்றிருந்தார்.

அடுத்த பந்தயம் இவ்வார இறுதியில் பிரேசிலில் நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்