கம்போடியக் காற்பந்து லீக் குழுவின் பயிற்றுநராக சிங்கப்பூரர்

1 mins read
7ee20689-9d0b-401b-bd49-4220065f7a9f
சிங்கப்பூர் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் சத்தியசாகரா. - படம்: ரூக்புக் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு நிறுவனம்

சிங்கப்பூர் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரான சத்தியசாகரா (முன்னர் கே. பாலகுமாரன் என்று அழைக்கப்பட்டார்) கம்போடிய பிரிமியர் லீக்கில் இடம்பெறும் குழு ஒன்றின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.

சகிரிவிங் சொக் சென் செய் எனும் அந்த கம்போடிய காற்பந்துக் குழுவுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கும் இரண்டாவது சிங்கப்பூரர் எனும் பெருமையும் இவரை சேரும்.

இவரது பயிற்சியின்கீழ் அந்த மன்றம் 2022ல் அதன் முதல் உள்நாட்டுப் பட்டத்தையும் வென்றது.

சிங்கப்பூர் தேசிய பெண்கள் அணிகளான கோம்பாக் யுனைடெட், ஹவ்காங் யுனைடெட் ஆகியவற்றுடனும் சத்தியசாகரா பயணித்துள்ளார்.

“வெளிநாட்டில் பயிற்சியளிப்பது சவால் மிக்கதாக இருந்தாலும் நான் அதை நேர்மறையாக பார்த்து விளையாட்டாளர்களை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். பெருமிதமாகவும் உணர்கிறேன்,” என்று தமிழ் முரசின் கேள்விக்குப் பதிலளித்தார் சத்தியசாகரா.

ரூக்புக் ஸ்போர்ட்ஸ் எனும் விளையாட்டு நிறுவனத்தால் சத்தியசாகரா பிரதிநிதிக்கப்படுகிறார்.

“சத்தியசாகராவை கம்போடியா அனுப்புவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது அனுபவத்திற்கு அவர் அங்கு சிறப்பாக பயிற்சியளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விக்ரம் ஜெயக்குமார் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்