தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: இந்தியாவை வீழ்த்திய சிங்கப்பூர்

1 mins read
973f86b3-0e09-4c70-9156-87ad2dc233d7
இந்தியாவின் தற்காப்பை உடைத்து இரண்டு கோல்களை அடித்த சிங்கப்பூரின் சாங். - படம்: சிங்கப்பூர் காற்பந்து சங்கம்.

கோவா: ஏஎஃப்சி ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவுடனான ஆட்டத்தில் சிங்கப்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) இரவு இந்தியாவின் கோவா நகரில் நடந்தது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது. இந்நிலையில் 44வது நிமிடத்தில் சிங்கப்பூரின் சாங் உய் யங் தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கோலாக மாற்றினார்.

இந்தியாவின் தற்காப்பை மீண்டும் உடைத்த சாங் 58வது நிமிடத்தில் சிங்கப்பூருக்கு இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூருக்கு ஆசியக் கிண்ணத்திற்கான தகுதிபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அடுத்த மாதம் 18ஆம் தேதி ஹாங்காங்குடன் மோதவுள்ளது.

குறிப்புச் சொற்கள்