பாரிஸ்: ஃபிஃபா என்று அழைக்கப்படும் அனைத்துலக காற்பந்துக் கூட்டமைப்பு ஆண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.
யூரோ 2024 கிண்ணத்தைக் கைப்பற்றிய ஸ்பெயின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. மூன்றாவது இடத்தில் உலகக் கிண்ண வெற்றியாளரான அர்ஜென்டினா இருக்கிறது.
இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேசில் முறையே நான்கு, ஐந்து, ஆறு ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன. பத்தாவது இடத்தில் இத்தாலி உள்ளது.
முதன்மையான அணிகளுள் ஒன்றான ஜெர்மனி 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அணியின் ஆட்டம் மோசமாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூருக்கு 158ஆம் இடம் கிடைத்தது. மலேசியா 123வது இடத்திலும் இந்தியா 134வது இடத்திலும் வந்தன.
தரவரிசை விவரங்களை ஃபிஃபா வியாழக்கிழமை அதன் இணையத்தளத்தில் வெளியிட்டது.