ஐவரி கோஸ்ட்டிடம் அடைந்த தோல்வியைப் படிப்பினையாக எடுத்துக்கொண்ட பிரான்ஸ்

ஐவரி கோஸ்ட்டிடம் அடைந்த தோல்வியைப் படிப்பினையாக எடுத்துக்கொண்ட பிரான்ஸ்

2 mins read
8658ab61-e24d-45a3-b680-a92160e86443
ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பிரான்சின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜூல்ஸ் கவுண்டேவும் (இடது) ஐவரி கோஸ்ட்டின் மத்திய திடல் ஆட்டக்காரர் செகோ ஃபோஃபானாவும் பந்துக்காகப் பாய்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: வியாழக்கிழமை (ஜூன் 4) நடந்த உலகக் கிண்ண அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டிடம் 2-1 என்ற கோல் கணக்கில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிறகு, பிரான்ஸ் குழு கவலைகளைப் புறந்தள்ளியதுடன், இந்தத் தோல்வி போட்டிக்கு முன்னதாக ஒரு பயனுள்ள படிப்பினையாக இருக்கும் என்றும் வலியுறுத்தியது.

டிடியர் டெஷாம்ப்சின் பிரான்ஸ் குழு, ரயான் செர்கியின் அற்புதமான முற்பாதி கோல் மூலம் முன்னிலை பெற்றது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு எதிரணியின் குவேலா டூ மற்றும் அமாட் டியாலோ ஆகியோர் தங்கள் குழுவுக்காக கோல் போட்டதால், பிரான்ஸ் குழு திணறியது.

ஜூன் 16ஆம் தேதி, நியூயார்க்கில் செனகலுக்கு எதிராக பிரான்ஸ் தனது உலகக் கிண்ணப் பயணத்தைத் தொடங்கும் நிலையில், இந்த முடிவை ஓர் எச்சரிக்கை அறிகுறியாகக் கருதாமல், ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்று பிரான்ஸ் மத்திய திடல் ஆட்டக்காரர் ஆரெலியன் சௌமெனி கூறினார்.

“தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. ஆனால் நாங்கள் ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம், நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று சௌமெனி கூறினார்.

கடந்த வார இறுதியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாரிஸ் செயின்ட் ஜெமென் அணியின் ஆட்டக்காரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் ஒரு சோதனை அணியைக் களமிறக்கியதுடன், இடைவேளைக்குப் பிறகும் ஏராளமான மாற்றங்களைச் செய்தது.

இருப்பினும், ஊக்கமளிக்கும் தொடக்க 45 நிமிடங்களுக்குப் பிறகு தனது குழு ஆட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததை பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் டெஷாம்ப்ஸ் ஒப்புக்கொண்டார். மேலும், அமெரிக்காவிலும் இதே போன்ற திறன்களைக் கொண்ட எதிரணிகளை பிரான்ஸ் எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

“முற்பாதியில் நாங்கள் சில நல்ல விஷயங்களைச் செய்திருந்தாலும், தோல்வி ஒருபோதும் இனிமையானதன்று,” என்றும் டெஷாம்ப்ஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பிரான்ஸ்பயிற்றுவிப்பாளர்உலகக் கிண்ணம்