தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாலத்தீவு அணியை 3-1 என வீழ்த்திய சிங்கப்பூர்

1 mins read
3d2e7d32-c30a-4650-a05f-dc0a32b43bc0
சிங்கப்பூர்க் குழுவின் முன்னணி ஆட்டக்காரர் இக்சான் ஃபாண்டி, இரண்டு கோல்களைப் புகுத்திய களிப்புடன் காணப்படுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆறு ஆட்டங்களில் சிங்கப்பூரின் காற்பந்து அணி வெற்றி பெறாத நிலையில் அவ்வணி ஜூன் 10ஆம் தேதியன்று பங்களாதேஷில் நடைபெறும் ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்றுக்குச் செல்லவுள்ளது.

பீஷான் விளையாட்டரங்கில் வியாழக்கிழமையன்று (ஜூன் 5) நடைபெற்ற அந்த நட்பாட்டத்தில் மாலத்தீவு அணியைச் சிங்கப்பூர் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதை அடுத்து சிங்கப்பூர் அணி போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் 2,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் சிங்கப்பூர் குழுவின் முன்னணி ஆட்டக்காரர் இக்சான் ஃபாண்டி, இரண்டு கோல்களைப் புகுத்தினார்.

View post on Instagram
 

இதற்கு முன்னதாக சிங்கப்பூர் அணி வெற்றிபெற்ற கடைசி ஆட்டம், கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஆசியான் வெற்றியாளர் கிண்ணப்போட்டியின்போது இடம்பெற்றது. அப்போது தீமோர் லெஸ்டே அணியைச் சிங்கப்பூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தேசிய அணியில் மீண்டும் இடம்பெற்றதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய 26 வயது இக்சான், இனி செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளதாகவும் மிக முக்கிமான அடுத்த ஆட்டத்தின்மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்