ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

படம்: தி ஹிந்து

03 Oct 2026 - 11:32 pm

1 mins read

புதுடெல்லி: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் மலேசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அடுத்தடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றதும் மற்றொரு சாதனையாகும்.

சனிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய, மலேசிய அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தங்கம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான நேரடித் தகுதியையும் பெற்றுள்ளது இந்திய ஆடவர் அணி.

முன்னதாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் தங்கம் வென்றது. ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில், ஒரே சமயத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதன் முறையாகும்.

இந்திய மகளிர் அணியும் இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ஹாக்கிதங்கப் பதக்கம்இந்தியாமலேசியாஜப்பான்