உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் முதல் சுற்று முடிந்து 32 குழுக்கள் களமிறங்கும் ‘நாக் அவுட்’ சுற்று தொடங்கிவிட்டது.
இனி ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கிண்ணப் பயணம் தொடரும். தோல்வியின் பிடியில் சிக்கும் குழுக்களின் உலகக் கிண்ணக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் முரசின் ‘காற்பந்துக் கலாட்டா’வின் இரண்டாவது வலையொளி வெளியிடப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், மனதைக் கவர்ந்த அபார கோல்கள், பிரமிக்கவைத்த ஆட்டங்கள், ஆட்டக்காரர்கள் ஆகியவற்றைப் பற்றி இதில் அலசி ஆராயப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியின் சில அம்சங்கள் குறித்தும் நிகழ்ந்த சர்ச்சைகள் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. காற்பந்து ரசிகர்களின் குரலாக இருந்து இது தொடர்பாக வலையொளியில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அடுத்த சுற்றுக்கு எந்தெந்த குழுக்கள் தகுதி பெற்றுள்ளன, யார் யாருடன் மோதுகிறார்கள் என்ற தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எந்தெந்த குழுக்கள் தகுதி பெறக்கூடும், எந்தெந்த ஆட்டங்கள் சவால்மிக்கவையாக இருக்கும் என்ற கருத்துகள், ஊகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி என்று வரும்போது இதுதான் நடக்கும் என்று யாராலும் அடித்துக்கூறிவிட முடியாது. ஆட்டத்தின்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
இதுவே, உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் தனித்துவம் என்று கூறினால் அது மிகையன்று. இவ்வாறு இருந்தால்தான் அது உலகக் கிண்ணப் போட்டி.
இதுபோன்ற பல சுவைமிகு தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ள தமிழ் முரசின் ‘காற்பந்துக் கலாட்டா’வுடன் தொடர்ந்து இணைந்திருங்கள், கண்டு களியுங்கள்.

