தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

32 பந்துகளில் சதம் விளாசிய கேரள வீரர்

1 mins read
17 சிக்சர்களைப் பறக்கவிட்டார்
292e3cb4-ec8f-4b8a-a53b-857d97dfac8b
சதமடித்த விஷ்ணு வினோத். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: டி20 கிரிக்கெட் போட்டியில் 32 பந்துகளில் நூறு ஓட்டங்களை விளாசி, சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு வினோத்.

கேரள கிரிக்கெட் லீக் (கேசிஎல்) தொடரில் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.

அப்போட்டித் தொடரில் திருச்சூர் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் 30 வயதான விஷ்ணு.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 13) திருச்சூர் அணி, ஆலப்புழா ரிப்பில்ஸ் அணியை எதிர்த்தாடியது.

முதலில் பந்தடித்த ஆலப்புழா அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக முகம்மது அசாருதீன் 90 ஓட்டங்களை விளாசினார்.

நல்ல இலக்குதான் என்றாலும் அது ஆலப்புழா அணிக்கு வெற்றி தேடித் தர போதுமானதாக இல்லை. விஷ்ணு அதிரடியாக ஆட, 12.4 ஓவர்களிலேயே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியது திருச்சூர் அணி.

விஷ்ணு 45 பந்துகளில் 17 சிக்சர், ஐந்து பவுண்டரிகளுடன் 139 ஓட்டங்களைக் குவித்தார். கேரள கிரிக்கெட் லீக்கில் அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இதுதான்.

மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் கேரள கிரிக்கெட் லீக், இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்